இலங்கை
யாழில் முதியவரை மோதிய சொகுசு பேருந்து ; ஸ்தலத்தில் உயிரிழப்பு

யாழில் முதியவரை மோதிய சொகுசு பேருந்து ; ஸ்தலத்தில் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கைதடிப் பகுதியில் முதியோர் இல்லம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்த விபத்து நேற்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது. விபத்தில் 79வயதான சச்சிதானந்தம் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மேற்படி முதியவர் ஐந்து நாள் விடுமுறையில் தனது சொந்த இடமான வண்ணார்பண்ணைக்கு செல்ல புறப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போதே யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
முதியவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்