சினிமா
பலாப்பழத்தால் படம் வரைந்த ரசிகர்.! பிறந்தநாளைக் கொண்டாடும் மோகன்லாலுக்கு கிடைத்த வரவேற்பு!

பலாப்பழத்தால் படம் வரைந்த ரசிகர்.! பிறந்தநாளைக் கொண்டாடும் மோகன்லாலுக்கு கிடைத்த வரவேற்பு!
மலையாள திரையுலகின் பேரழகுப் புரட்சித் திலகமாக நூற்றுக்கணக்கான ஹிட் படங்களை வழங்கியவர் நடிகர் மோகன்லால். அத்தகைய நடிகர் இன்று 65வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், கேரளாவைச் சேர்ந்த ஒரு ரசிகர் செய்த செயல், தற்போது இணையத்தில் பெரும் அற்புதத்தை உருவாக்கியுள்ளது.கலை உலகில் அடையாளம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த டாவின்சி சுரேஷ் என்ற ரசிகர், மோகன்லாலின் 65வது பிறந்த நாளுக்காக ஒரு வித்தியாசமான கலைநயத்துடன் உருவாக்கிய புகைப்படம் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.அதிக நேரம் செலுத்தி, நேர்த்தியாக, இயற்கைப் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓவியம், திகைக்க வைக்கும் அளவிற்கு அழகாகவும், புதுமையாகவும் உள்ளது. பலாப்பழம், பழங்கள், காய்கறிகள், இலைகள், தோல்கள் என 65 வகையான இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதே இதில் முக்கிய சிறப்பம்சமாகும்.மோகன்லால் 65வது வயதினைத் தொடுவதையொட்டி, மொத்தமாக 65 வகையான பொருட்கள் கொண்டு ஓவியத்தை உருவாக்கியுள்ளார் டாவின்சி சுரேஷ். இதில் முக்கியமாக இடம் பெற்றது சிவப்பு நிற பலாப்பழம் தான். அந்த ஓவியரும் இந்த சிவப்பு நிற பலாப்பழத்தைப் பார்த்த பின்பே இப்படி ஒரு முயற்சியினை எடுக்க முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார். 8 அடி உயரம் கொண்ட இந்தப் படத்தில், மோகன்லாலின் முகம் முழுமையான உணர்வோடு வெளிப்படுகின்றது. பார்ப்பதற்கு அது ஒருவகை ஃபோட்டோ பிரிண்ட் போலவும், நுணுக்கமான கைவண்ணத்துடன் கூடிய ஓவியமாகவும் தெரிகின்றது.இந்த ஓவியத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் ஷேர் செய்யப்பட்டு பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்பட பிரபலங்களும், கலையுலக நண்பர்களும் இந்த முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.