Connect with us

இலங்கை

கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான கலந்துரையாடல்!

Published

on

Loading

கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான கலந்துரையாடல்!

மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (20)  நடைபெற்றது. 

இக்கலந்துரையாடலில்  கருத்து தெரிவித்த மாவட்ட செயலர்;

Advertisement

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை வலியுறுத்தினார். மேலும், ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார். 

இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, மாவட்ட செயலர் கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டது. 

இக் கலந்துரையாடலிலும், நேரடியான களதரிசிப்பிலும், மேலதிக மாவட்ட செயலர் (காணி)ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் கிருபாகரன்,  பிரதம பொறியியலாளர் திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தா்சினி, நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன