Connect with us

பொழுதுபோக்கு

ஒரே சீரியல் தான்… தமிழ் ரசிகர்களை கவர்ந்த இந்த சிறுமி இப்போ சின்னத்திரை குயின்: யார்னு தெரியுமா?

Published

on

Priyanka Nalkari Childhood

Loading

ஒரே சீரியல் தான்… தமிழ் ரசிகர்களை கவர்ந்த இந்த சிறுமி இப்போ சின்னத்திரை குயின்: யார்னு தெரியுமா?

சினிமா பிரபலங்கள் அவ்வப்போது தங்களது குழந்தைப் பருவ புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது வழக்கம். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவுவதோடு, ரசிகர்களை ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.சின்னத்திரையில் தான் நடித்த முதல் சீரியலிலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த நடிகை, ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் ஒரிஜினல் பெயர் மறந்து இப்போதும், ரோஜா என்று பலரும் அழைக்கும் நடிகை பிரியங்கா நல்காரி தான் அந்த குழந்தை. இவர் தனது குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.அந்தப் புகைப்படத்தில், பிரியங்கா தனது தாயுடன் மிகவும் அன்பாக இணைந்துள்ளார். குட்டைப் பாவாடையும், சிறிய குர்தாவும் அணிந்திருக்கும் சிறுமி பிரியங்காவின் அந்தப் புகைப்படம் பார்த்தவுடன் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இந்தப் புகைப்படத்தைப் பகிர, அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.அவரது ரசிகர்கள் பலரும் அந்தப் புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்ட்களையும் தெரிவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அந்தப் புகைப்படம் பலரது பழைய நினைவுகளையும் கிளறிவிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரியங்கா நல்காரி தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ‘தீயா வேலை செய்யுனும் குமாரு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா 3’ திரைப்படத்திலும் நடித்தார். இருப்பினும், அவரது திரைப்பட வாழ்க்கை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.அதன்பிறகு, சின்னத்திரையில் அவர் நுழைந்தது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியலில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியலுக்காக அவர் இரண்டு முறை சன் டிவி குடும்ப விருதுகளையும் வென்றார்.ரோஜா சீரியலுக்கு பின், ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் சீரியலில் நடித்து பாதியில் விலகினார். பிரியங்கா நல்காரி தனது நீண்ட கால காதலரான ராகுல் வர்மாவை கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு, ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பான ‘நள தமயந்தி’ என்ற சீரியலில் நடித்த பிரியங்கா நல்காரி, தற்போது யூடியூப்பில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா 2 சீரியலில் நடித்து வருகிறார்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன