இலங்கை
வடக்கு, கிழக்கு கட்சிகளுடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

வடக்கு, கிழக்கு கட்சிகளுடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும், வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பில், கடந்த மார்ச் மாதம் அரசால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றக் கூட்டமொன்றும் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது