வணிகம்
Today Gold Rate: தங்கம் விலை தொடர் உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

Today Gold Rate: தங்கம் விலை தொடர் உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
சர்வதேச நிலவரங்களால், இம்மாத துவக்கத்தில் இருந்து, தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 20), ஆபரண தங்கம் கிராம் 8,710 ரூபாய்க்கும், சவரன் 69,680 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.நேற்று (மே 21), ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 220 ரூபாய் உயர்ந்து, 8,930 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,760 ரூபாய் அதிகரித்து, 71,440 ரூபாய்க்கு விற்பனையானது.இன்று (மே 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,975க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்தை நெருங்கி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.