இலங்கை
சட்டவிரோத நிதி நிறுவனம்; பலகோடி நிதி ஏய்ப்பு செய்த தம்பதி

சட்டவிரோத நிதி நிறுவனம்; பலகோடி நிதி ஏய்ப்பு செய்த தம்பதி
சட்டவிரோத நிதி நிறுவனத்தை நடத்தி பொது மக்களிடம் மோசடி செய்த குற்றத்தில் சக்விதி மற்றும் அவரது மனைவிக்கு நீதிம்ன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அதன்படி 16 கோடியே 41 இலட்சம் ரூபாவுக்கு மேல் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகையாக பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்களுக்கு மேற்படி தண்டனையை கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.
சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சந்தன வீரகுமார எனப்படும் சக்விதி ரணசிங்க மற்றும் அவரது மனைவி குமாரி அனுராதினி ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது.