Connect with us

வணிகம்

ரூ. 95,000 வரை மிச்சம்… இந்த 2 கிரெடிட் கார்டில் மட்டும் இத்தனை ஆஃபர் இருக்கு!

Published

on

Credit card offers

Loading

ரூ. 95,000 வரை மிச்சம்… இந்த 2 கிரெடிட் கார்டில் மட்டும் இத்தனை ஆஃபர் இருக்கு!

இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் கிரேடிட் கார்ட் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களில் வெகு சிலருக்கு மட்டுமே இலவச ரிவார்ட் பாயிண்ட்ஸ், கேஷ்பேக் மற்றும் எரிபொருள் கட்டணத்தில் சலுகை போன்றவை கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.அதனடிப்படையில், கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு எளிதாக சுமார் ரூ. 95 ஆயிரம் வரை செமிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதுவரை கிரெடிட் கார்ட் பயன்படுத்தியது இல்லை என்று நினைப்பவர்கள் IDFC Millenia கிரெடிட் கார்டை வாங்கி உபயோகிக்கலாம். இந்தக் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ. 5000 செலவு செய்தால், கூப்பனாக ரூ. 500 கிடைக்கும். மேலும், இதில் 10 மடங்கு அதிகமான ரிவார்ட் பாயிண்ட்ஸ் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.திரைப்படங்களுக்கான டிக்கெட்டை இதன் மூலம் ஆர்டர் செய்யும் போது ரூ. 100 வரை தள்ளுபடி கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் இந்தக் கிரெடிட் கார்டை பெற முடியும். இதற்கு அடுத்தபடியாக Kiwi கிரெடிட் கார்ட் இடம்பெறுகிறது. இந்தக் கிரெடிட் கார்டை யு.பி.ஐ மூலம் பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக் கிடைக்கும். இந்தக் கிரெடிட் கார்டை பெற சிபில் ஸ்கோர் 720-க்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும்.இதற்கு அடுத்த இடத்தில் HDFC Tata Neu Plus கிரெடிட் கார்ட் இருக்கிறது. இந்தக் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் வரை சேமிக்க முடியும். உதாரணத்திற்கு, பிக்பாஸ்கெட், ஏர் ஏசியா, க்ரோமா போன்ற டாட்டா நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் 7 சதவீதம் வரை சேமிக்க முடியும். மாத வருமானம் ரூ. 25 ஆயிரமாக இருந்தால், இந்த கிரெடிட் கார்டை பெறலாம். இதேபோல், எஸ்.பி.ஐ கேஷ்பேக் கிரெடிட் கார்டிலும் நிறைய ஆஃபர்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தக் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 65 ஆயிரம் வரை சேமிக்க முடியும். ஆன்லைனில் இந்தக் கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக்,  ஆஃப்லைனில் உபயோகிக்கும் போது 1 சதவீதம் வரை கேஷ்பேக் கிடைக்கிறது.இந்தக் கிரெடிட் கார்டை வாங்க வேண்டுமென்றால் மாத வருமானம் ரூ. 30 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும். எனவே, இது போன்ற கேஷ்பேக்கை பயன்படுத்தி ஒவ்வொரு பரிவர்த்தனைகளின் போதும் நம்மால் ஏராளமான பணத்தை சேமிக்க முடியும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன