சினிமா
விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. ஐஸ்வர்யா ராய் Cannes விழாவில் கொடுத்த அதிர்ச்சி

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. ஐஸ்வர்யா ராய் Cannes விழாவில் கொடுத்த அதிர்ச்சி
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை உலக அழகி என்றால் அது எப்போதுமே ஐஸ்வர்யா ராய் தான், 1997ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் நிறைய விருதுகளை அள்ளிக்குவித்துள்ளார்.இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.இவர்கள் விவாகரத்து குறித்து அடிக்கடி இணையத்தில் செய்திகள் உலா வரும் நிலையில், அதற்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.அதாவது, கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.ஆண்டுதோறும் விதவிதமான ஆடைகளில் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா ராய், இந்த முறை பனாரஸ் புடவையில் நெற்றியில் குங்கும திலகமிட்டபடி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ போட்டோஸ்,