இலங்கை
தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா!

தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா!
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற சிறுமி பாடி வந்துள்ளார்.
அவர் தனது சுற்றினை முடித்து மீண்டும் நேற்றையதினம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். இதன்போது ஒன்றுகூடிய மக்கள் அவருக்கு பொன்னாடை போர்த்து கௌரவித்து வரவேற்பு செய்தனர். பின்னர் வாகனங்கள் அணிவகுத்து வர சொந்த ஊருக்கு காரில் அழைத்து வரப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவரது ஊரான கொக்குவில் பகுதியில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.