இலங்கை
நாளை பூமியை கடக்கும் மிகப்பெரிய கோள்; விஞ்ஞானிகள் அச்சம்!

நாளை பூமியை கடக்கும் மிகப்பெரிய கோள்; விஞ்ஞானிகள் அச்சம்!
இந்த வார இறுதியில் ஈபிள் கோபுரத்தை விடப் பெரிய ஒரு பிரமாண்டமான சிறுகோள் ஒன்று , பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
387746 (2003 MH4) என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள், அதன் மிகப்பெரிய அளவு மற்றும் பூமியை நெருங்கிய பயணப் பாதை காரணமாக “சாத்தியமான அபாயகரமான சிறுகோள்” (PHA) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது மே 24 அன்று மாலை 4:07 IST (10:37 UTC) மணிக்கு பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மிகப்பெரிய விண்வெளிப் பாறை 1,100 அடி (335 மீட்டர்) அகலம் கொண்டது – கிட்டத்தட்ட 100 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டது.
மேலும் மணிக்கு 30,060 கிமீ/மணி வேகத்தில் விண்வெளியில் பயணிக்கிறது.
இது ஒப்பீட்டளவில் பூமியில் இருந்து 6.67 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட சுமார் 17 மடங்கு அதிகம்.
எனினும், சிறுகோள்கள் வானியலாளர்களுக்கு மிகவும் கவலையளிக்கின்றன, ஏனெனில் அவற்றின் பூமியைக் கடக்கும் சுற்றுப்பாதைகள் சிறிதளவு மாறினாலும் தாக்க அச்சுறுத்தல்களாக மாறுவதற்கான முக்கிய நிலையில் உள்ளன.
அதேவேளை இந்த அளவிலான ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கினால், அதன் விளைவுகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.
வெளியிடப்பட்ட ஆற்றல் ஆயிரக்கணக்கான அணு குண்டுகளுக்குச் சமமாக இருக்கும் என்றும், , நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலமுள்ள சுற்றளவில் உள்ள அனைத்தையும் தரைமட்டமாக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இந்த தாக்கம் மெகா-சுனாமிகள், பூகம்பங்கள், காட்டுத்தீ ஆகியவற்றைத் தூண்டி, சூரிய ஒளியைத் தடுக்க போதுமான தூசியை வளிமண்டலத்தில் வீசக்கூடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.