இந்தியா
தொடர்மழை : சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர்மழை : சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பெஞ்சல் புயலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் சுமார் 30 சென்டிமீட்டர் வரையிலும் மழை பதிவாகியுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்திலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல்வேறு சமவெளி பகுதிகளிலும் மழைநீர் தேங்கி மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. என் நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக நாளை (டிச. 02) சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கபடுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.