உலகம்
போலி ஆவணங்களுடன் கைதான இலங்கையர்கள்!

போலி ஆவணங்களுடன் கைதான இலங்கையர்கள்!
போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானாவை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 இலங்கையர்களையும் கைது அல்பேனிய அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதேவேளை, வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் பொருள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.