Connect with us

சினிமா

அஜித்துக்கு ஜோடியாகும் 32 வயது நடிகை! யார் தெரியுமா

Published

on

Loading

அஜித்துக்கு ஜோடியாகும் 32 வயது நடிகை! யார் தெரியுமா

தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் அஜித் இந்த ஆண்டு குட் பேட் அக்லி எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார் ரேஸில் பிசியாக இருக்கும் அஜித், தனது 64வது திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது . GBU படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக்தான் இயக்கப்போகிறாராம்.வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.இந்த நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கப்போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் கூறுகின்றனர். நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கன்னடத்தில் வெளிவந்த கேஜிஎப் படத்தின் மூலம் பிரபலமானவர்.பின் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. மேலும் சமீபத்தில் வெளிவந்த ஹிட் 3 திரைப்படத்தில் நாணியுடன் இணைந்து நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது அஜித்துடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன