இலங்கை
இடர் நிவாரணங்களுக்காக யாழ்.மாவட்டத்துக்கு 12 மில்லியன் ரூபா விடுவிப்பு!

இடர் நிவாரணங்களுக்காக யாழ்.மாவட்டத்துக்கு 12 மில்லியன் ரூபா விடுவிப்பு!
வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதற்கட்ட நிவாரண நிதியாக 12 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுத் தேவை மற்றும் உலருணவுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக 11 மில்லியன் ரூபாவும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அவசரத் திருத்தப் பணிகளுக்காக ஒரு மில்லியன் ரூபாவும் விடுவிக்கப்பட்டுள்ளது. (ப)