Connect with us

உலகம்

பிரதமர் மோடியின் காலில் விழுந்த சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்!

Published

on

Loading

பிரதமர் மோடியின் காலில் விழுந்த சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 17/06/2025 | Edited on 17/06/2025

 

3 நாடுகளுக்கு அரசு பயணம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி கடந்த 15ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். முதற்கட்டமாக அவர், மத்திய தரைகடல் தீவு நாடான சைப்ரஸுக்கு சென்றார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், சைப்ரஸ் அதிபர் மாளிகையில் நேற்று (16-06-25) அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சுடன், இரு நாட்டு உறவு தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதனை தொடர்ந்து, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகோரியோஸ் 3’ என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சைப்ரஸ் நாடு கெளரவித்தது. இந்த விருது நாட்டிற்கு சிறப்பான சேவை செய்ததற்காக நாட்டின் தலைவர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அந்தஸ்துள்ள மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்த விருது என்னை மட்டும் கெளரவிக்கவில்லை, 140 கோடி இந்திய மக்களையும் கெளரவிக்கிறது. இந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவுக்கும், பரஸ்பர புரிதலுக்கும் இந்த விருதை சமர்பிக்கிறேன்” என்று பெருமையோடு கூறினார். 

Advertisement

இதையடுத்து, சைப்ரஸ் நாட்டில் நிகோசியா வரலாற்று மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை வரவேற்பதற்காக சைப்ரஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பிரதமர் மோடியை கை கொடுத்து வரவேற்ற நிகோசியா நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேலே கைத்ரியோட்டி ம்லாபா என்பவர், மரியாதை செலுத்தும் விதமாக திடீரென்று அவரது காலில் விழுந்து வணங்கினார். உடனடியாக பிரதமர் மோடியும், உறுப்பினர் மைக்கேலேவின் தலையில் கையில் கைவைத்து ஆசிர்வதித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டை உள்ளடக்கிய பிரதமர் மோடியின் மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சைப்ரஸுக்கு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைப்ரஸ் நாட்டைத் தொடர்ந்து கனடாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி-7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயில் பெட்டியில் தீ; துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்!

  • முகம் சிதைந்த நிலையில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை-போலீசார் விசாரணை

  • பிரதமர் மோடியின் காலில் விழுந்த சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்!

  • பலிக்காத மாந்திரீக பூஜை- கால்வாயில் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்- நெல்லையில் அதிர்ச்சி

  • “உடனடியாக வெளியேறுங்கள்…” – ஈரான் மக்களுக்கு அதிபர் டிரம்ப் விட்ட எச்சரிக்கை!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன