Connect with us

சினிமா

துல்கர் சல்மானின் “காந்தா” திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு.!மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

Loading

துல்கர் சல்மானின் “காந்தா” திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு.!மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் தவிர்க்க  முடியாத நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் பல திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். மேலும் இவர் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என வலம் வருகின்றார். இந்த நிலையில் இவரது அடுத்த திரைப்படமான “காந்தா” படத்தின் வெளியாகும் திகதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி  என பலமொழிகளில் இவரது திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் கடைசியாக வெளியான சீதா ராமம் மற்றும்  லக்கி பாஸ்கர் திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாப்பட்டது. மேலும் தற்போது காந்தா திரைப்படத்தில் நடித்து வருகின்றார் . செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் கூட்டணியில் உருவாகி வருகின்றது ” காந்தா” திரைப்படம். இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர்  நடித்துள்ளனர். துல்கர் சல்மான், ராணா டகுபதி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இந்த  திரைப்படம்  ஆகஸ்ட் 1 ஆம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இத் தகவல் அறிந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன