Connect with us

விளையாட்டு

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

Published

on

Loading

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 

இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.

Advertisement

அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 

இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. 

Advertisement

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில் யங் 51 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் கடும் நெருக்கடி கொடுத்தார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா (11 ரன்கள்) மற்றும் விராட் கோலி (1 ரன்) இந்த முறையும் ஏமாற்றினர். 

மேலும் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கில் மற்றும் சர்பராஸ் கான் தலா 1 ரன்னிலும் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்காக தனி ஆளாக போராடினார். 

Advertisement

இருப்பினும் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பண்ட் 64 ரன்களில் ஆட்டமிழக்க அதோடு இந்திய அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது.

முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது.

Advertisement

 நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன