இலங்கை
கடமைகளைப் பொறுப்பேற்ற கொழும்பு மாநகர சபையின் முதல்வர்!

கடமைகளைப் பொறுப்பேற்ற கொழும்பு மாநகர சபையின் முதல்வர்!
கொழும்பு மாநகர சபையின் 26ஆவது முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் வ்ரே காலி பால்தசார் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 61 வாக்குகளைப் பெற்ற அவர், கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது பெண் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரிசா சாரூக் 54 வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.