இலங்கை
வடக்கு- கிழக்கில் மருத்துவர்களுக்கு திடீர் இடமாற்றம்!

வடக்கு- கிழக்கில் மருத்துவர்களுக்கு திடீர் இடமாற்றம்!
வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மருத்துவர் ஆர். முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர் ஜி. சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு மருத்துவமனையின் பணிப்பாளராகவும், மருத்துவர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், மருத்துவர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது மருத்துவமனை பணிப்பாளராகவும், டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை பணிப்பாளராகவும், டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது மருத்துவமனை பணிப்பாளராகவும், டி.எம்.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது மருத்துவமனை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின்னர் அமுலுக்கு வரும் வகையில் இவ்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)