Connect with us

சினிமா

தக் ஃலைப்’ உண்மையில் அருமையான படம்.!மோசமான விமர்சங்களுக்கு பதில் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்!

Published

on

Loading

தக் ஃலைப்’ உண்மையில் அருமையான படம்.!மோசமான விமர்சங்களுக்கு பதில் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்!

மணிரத்னம் இயக்கிய ‘தக் ஃலைப்’ திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி பல விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் எனப் பலர் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.இதற்கான கரணம் குழப்பமான கதைக்களம்  தான் காரணம் என்று பல ரசிகர்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படத்தை பார்த்து  விமர்சனத்தையும் வழங்கியுள்ளார் . இந்த விமர்சனத்தை பார்த்த ரசிகர்களை அதிர்ச்சியடைந்துள்ளனர் . மேலும் அவர் பகிர்ந்த பதிவில்  “தக் ஃலைப்” படத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து போனதாகவும் . ஒரு  சிறந்த படத்தினை சிலர் ஏன் இவ்வளவு மோசமான விமர்சனங்களை கொடுத்திருக்கின்றார்கள் என்று எனக்குப் புரியவில்லை என்பது பற்றி கூறியிருந்தார் . மேலும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்த ஆங்கிலப் படமாக இருந்திருந்தால் அதைப் பாராட்டியிருப்போம் என்றும்கூறியுள்ளார்.மேலும் கூறுகையில் படத்தில் ஆழமான கதை, அதிர்ச்சயூட்டும் காட்சியமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சர்வதேச தர பின்னணி இசை, கவர்ச்சிகரமான நடிப்பு மற்றும் சிறந்த எடிட்டிங் ஆகியவை  சிறப்பாக இருப்பதாகவும்  ஒரு காட்சி கூட சலிப்பை அவருக்கு ஏற்படுத்தவில்லை” என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன