சினிமா
ஏக்கத்துக்கு கிடைத்த பலன்.. சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி – செந்தில் பகிர்ந்த எமோஷ்னல் வீடியோ

ஏக்கத்துக்கு கிடைத்த பலன்.. சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி – செந்தில் பகிர்ந்த எமோஷ்னல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சீனியர்கள், ஜுனியர்கள் என மாறி மாறி பல எபிசோடுகள் ஒளிபரப்பாகிறது,ஒவ்வொரு சீசனிற்கும் மக்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் பக்தி பாடல்கள் பாடி மக்களை கவர்ந்து வருகிறார்கள்.இந்த பக்தி பாடல்கள் ஷோவில் சினிமா பாடல்களை விட கிராமிய பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு புகழ்பெற்ற செந்தில்-ராஜலட்சுமி இருவரும் கலந்துகொண்டனர்.இந்நிலையில், சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடி இந்த ஷோவில் கலந்துகொள்ள சென்றபோது அவர்களுக்கு என்று தனி Caravan கொடுத்துள்ளார்களாம்.இதெல்லாம் தாங்கள் நினைக்காத ஒன்று, சந்தோஷமாக உள்ளது என வீடியோ வெளியிட்டுள்ளார் ராஜலட்சுமி. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.