Connect with us

இலங்கை

சரணாலயத்திற்குள் அரிய வகை ஆமையை சமைத்த பெண்கள் ; அதிகாரிகள் அதிர்ச்சி

Published

on

Loading

சரணாலயத்திற்குள் அரிய வகை ஆமையை சமைத்த பெண்கள் ; அதிகாரிகள் அதிர்ச்சி

வனவிலங்கு சரணாலயத்திற்குள் பதின்மூன்று ஃபிளாப்ஷெல் ஆமைகளை (Flapshell Turtle) பால் ஆமைகளை கொன்று அவற்றை உணவாக தயாரித்ததற்காக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

வனவிலங்கு அதிகாரிகள் இன்று  (24) பிற்பகல் நடத்திய சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர், சம்பவ இடத்தில் ஆமை இறைச்சி, கால்கள் மற்றும் முட்டைகளையும் அவர்கள் கைப்பற்றினர்.

Advertisement

சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மன்னாரை வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், குறித்த பெண்கள்  அந்தப் பகுதியில் வர்த்தகர்களாகச் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது. 

விசாரணைகளில், பெண்கள் தமன்கடுவ, கனுவா பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்குமிடத்தில் தங்கியிருந்ததாகவும், சரணாலயத்திற்குள் ஒரு இடத்தில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை இறைச்சிக்காக வெட்டி உணவுக்காகத் தயாரித்து வந்ததாகவும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பெண்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன