Connect with us

பொழுதுபோக்கு

அழகி, ரமணா படங்களில் நடித்த இந்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

Published

on

Actress baby Shruti

Loading

அழகி, ரமணா படங்களில் நடித்த இந்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

90-ஸ் பிள்ளைகள் மத்தில் பெரிய வரவேற்பை பெற்ற பல படங்கள் உள்ளன. ஆனால் ஒரு சில படங்கள், காலம் கடந்தும் அவர்களின் மனதில் நிலைத்திருக்கும். அந்த வகையிலான ஒரு படம் தான் அழகி. பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தை தங்கர் பச்சான் இயக்கியிருந்தார்.2002-ம் ஆண்டு வெளியான இந்த படம் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. அதேபோல் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களும் இப்போது முன்னணி ஸ்டார்களாக இருக்கின்றனர். அதே சமயம் இந்த படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில், தனது சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் நடிகை ஸ்ருதி. இந்த படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தில், அவரின் பக்கத்துவீட்டு பெண் கேரக்டரில் நடித்திருந்தார்.இந்த படத்தில் பரதநாட்டியத்திலும் ஸ்ருதி கலக்கியிருப்பார். 2000-ம் ஆண்டு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் ஸ்ருதி. அதன்பிறகு 2006-ம் ஆண்டு பாண்டியராஜன் மகன் ப்ரித்விராஜன் நடிப்பில் வெளியான கை வந்த கலை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் வெற்றியை பெறாத நிலையில், அடுத்து ஸ்ருதிக்கு சரியாக வாய்ப்பு அமையவில்லை. அதன்பிறகு சின்னத்திரை பக்கம் வந்த ஸ்ருதி, விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியுமா?சினிமாவில் இருந்து விலகிய அவர், ஜெர்மனியில் ஐ.டி.கம்பெனியில் வேலை செய்வதாக சில ஆண்டுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும், தனக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்றும், சிறுவயதில், நான் 2-ம் வகுப்பு படிக்கும்போதே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். ஆனால் சிறுவயது என்பதால் வசனங்கள் மனதில் வைத்துக்கொள்வது கஷ்டமாக இருந்தது. ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடிப்பை விட்டு படிக்க தொடங்கினேன். எனக்கு பாடுவது, நடனம் ஆடுவதும் பிடிக்கும் என்று கூறியள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன