இலங்கை
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் பணி வவுனியாவில் ஆரம்பம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் பணி வவுனியாவில் ஆரம்பம்!
நடைபெறவுள்ள நாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிக்கும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, வவுனியா மாவட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை(30) காலை முதல் தபால் மூல வாக்கினை அளிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு பலர் வருவதை காணக்கூடியதாக இருந்தது.
வவுனியா மாவட்ட செயலக காரியாலயம், பொலிஸ் காரியாலயம் உள்ளிட்ட இடங்கள் தபால் மூல வாக்களிப்பு பரிசீலனைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)