சினிமா
தனுஷுடன் கூட்டணி அமைக்க காத்திருக்கும் இயக்குநர்கள்…! யார் யார் தெரியுமா?

தனுஷுடன் கூட்டணி அமைக்க காத்திருக்கும் இயக்குநர்கள்…! யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தனுஷ், வெவ்வேறு கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அவரது சமீபத்திய திரைப்படமான “குபேரா”, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் விமர்சகர்களிடமும் நல்ல மதிப்பீடுகளை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்று முக்கிய இயக்குநர்கள் விக்னேஷ் ராஜன், மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் தனுஷை மையமாக கொண்டு புதிய படங்களை இயக்கத் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தனுஷின் நடிப்புத்திறன் மற்றும் கதையை தன்னுள் செரிக்கக்கூடிய சக்தி ஆகியவை இம் மூன்று இயக்குநர்களின் பார்வையிலும் முக்கியமாக கருதப்படுகின்றன. அதனால் அவரை வைத்து உருவாக இருக்கும் புதிய திரைப்படங்கள், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.இயக்குநர் விக்னேஷ் ராஜன்னுடன் தனுஷ் புதிதாக இணைகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கர்ணன்’ படத்தின் மூலம் சமூக நீதிக்குரிய நுண்ணிய விசயங்களை உருக்கமான காட்சிகளுடன் பேசும் இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷுடன் ஏற்கனவே பணியாற்றியுள்ளார். இப்போது மீண்டும் அவரை மையமாக கொண்டு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் ஒரு ஆழமான கதையாக இருக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் எழுந்துள்ளன .மேலும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியைப் பற்றி கூற வேண்டியதில்லை. ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘அசுரன்’ ஆகிய படங்கள் மூலம் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி கூட்டணியாக மாறி விட்டனர். இந்த நிலையில் வெற்றிமாறனும் தனுஷுடன் இணைந்து புதிய படமொன்றைத் திட்டமிட்டு வருகிறார். மேலும் தனுஷ், தனது பயணத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களையும், ஆழமான கதைகளையும் தேர்ந்தெடுக்கும் நடிகராக வலம் வருகிறார். தற்போது அவருடன் மூன்று முக்கிய இயக்குநர்கள் பணியாற்றத் தயாராக இருப்பது, தமிழ் சினிமாவின் தரநிலையை மேலும் உயர்த்தும் வகையில் இருக்கப்போகிறது. அவர்களின் கூட்டணிகள் தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றங்களை கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.