Connect with us

தொழில்நுட்பம்

இனி நீங்களும் டிஜிட்டல் ஆர்டிஸ்ட்தான்.. கற்பனையை நிஜமாக்கும் சாட்ஜிபிடி ப்ராம்ப்ட் மாயாஜாலம்!

Published

on

ChatGPT-Portraits

Loading

இனி நீங்களும் டிஜிட்டல் ஆர்டிஸ்ட்தான்.. கற்பனையை நிஜமாக்கும் சாட்ஜிபிடி ப்ராம்ப்ட் மாயாஜாலம்!

உயர் தரமான, போர்ட்ரெட் புகைப்படங்களை உருவாக்க இனி கேமரா, லைட்டிங் செட்டப் அல்லது எடிட்டிங் சாப்ட்வேர் தேவையில்லை. ChatGPT-ல் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன், text prompt கொடுத்து ஸ்டுடியோ தரத்திலான படங்களை உருவாக்க முடியும்.அண்மையில், @ruiz.acosta என்ற இன்ஸ்டா கிரியேட்டரின் வைரலான ரீல் ஒன்று, இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வலிமையை நிரூபித்துள்ளது. அந்த வீடியோவில், ChatGPT-யின் இமேஜ் ஜெனரேஷன் அம்சத்தைப் பயன்படுத்தி, மிகவும் தத்ரூபமான பிளாக்&வொயிட் போர்ட்ரெட் ஒன்று AI மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக, ChatGPT-யின் பட உருவாக்கும் திறன்கள் resolution மற்றும் detail ஆகியவற்றில் மட்டுமல்லாமல், stylistic flexibility விதத்திலும் பெரும் பாய்ச்சலைக் கண்டுள்ளன. புகைப்படத் தரமான யதார்த்தமான படங்கள் முதல் கற்பனை சார்ந்த ஓவியக் காட்சிகள் வரை, இந்த ஏ.ஐ. சிறப்பாக செயல்படுகிறது. தொழில்நுட்பத்தின் இந்த முன்னேற்றம், புகைப்படக் கலைஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, இணையத்தில் “ஜிப்லி-ஃபிகேஷன் (Ghibli-fication)” ட்ரெண்ட். இதில், பயனர்கள் தங்கள் புகைப்படங்கள் அல்லது காட்சிகளை புகழ்பெற்ற ஸ்டுடியோ ஜிப்லியின் (Studio Ghibli) கையால் வரையப்பட்ட தனித்துவமான ஓவியப் பாணியில் உருவாக்கினர். இது, செயற்கை நுண்ணறிவு மற்றும் கலை இணைந்த ஒரு புதிய பரிணாமத்தைக் காட்டியது, இணைய பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கசெயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை உருவாக்கும் திறனில் சமீப காலமாக பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ChatGPT போன்ற AI கருவிகள் நீங்கள் கொடுக்கும் prompts மிகவும் புத்திசாலித்தனமாகப் புரிந்துகொள்கின்றன. முன்பு இருந்ததைவிட, இந்த AI கருவிகள் இப்போது லைட்டிங் அமைப்புகள் (lighting setups), லென்ஸ் வகைகள் (lens types), உணர்ச்சிகள் (emotions), பின்னணி பிரிப்பு (background isolation), மற்றும் கலை பாணிகள் (artistic styles) போன்ற நுணுக்கமான விஷயங்களையும் புரிந்து கொண்டு படங்களை உருவாக்குகின்றன. இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள், உண்மையான concept art அல்லது உயர்தர டிஜிட்டல் ரெண்டரிங்குகளுக்கு (high-end digital renders) இணையாக உள்ளன.இந்த வெற்றியின் ரகசியம், நீங்கள் ஒரு படத்தை எப்படி விவரிக்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது. @ruiz.acosta என்ற இன்ஸ்டாகிராம் கிரியேட்டர் பயன்படுத்திய ப்ராம்ப்ட் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் கொடுத்த ப்ராம்ப்ட்: “Please generate a top-angle and close-up black and white portrait of my face, focused on the head facing forward. Use a 35mm lens look, 10.7K 4HD quality. Proud expression, water droplets on my face. Deep black shadow background – only the face is visible and appears ultra-sharp. 4:3 ratio, with a 1/5 processing depth effect.”இந்த விரிவான மற்றும் துல்லியமான விளக்கம், AI கருவிக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுத்து, ஒரு அற்புதமான, உயர்தர போர்ட்ரெட்டை உருவாக்க உதவியுள்ளது. இதன்மூலம், யார் வேண்டுமானாலும், தங்கள் கற்பனையை வரிகளாகக் கொடுத்து, தங்களுக்குத் தேவையான துல்லியமான படங்களை AI மூலம் உருவாக்க முடியும் என்பது தெளிவாகிறது.மேலே குறிப்பிடப்பட்ட அந்த ப்ராம்ப்ட் (prompt) ஏன் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்குப் பின்னால் தெளிவான காரணங்கள் உள்ளன. AI மாடலுக்கு (model) நாம் அளிக்கும் precise parameters வெற்றிக்குக் காரணம். ஒரு சாதாரண ப்ராம்ப்டுக்கும் உயர் தரமான படங்களை உருவாக்கும் ப்ராம்ப்டுக்கும் உள்ள வேறுபாட்டை இந்தக் காரணிகளில் தெரிகின்றன. Camera perspective and lens type: “top angle”, “35-mm lens” போன்ற விளக்கங்கள், தொழில்முறை போர்ட்ரெட் புகைப்படக் கலைஞர் வியத்தகு காட்சியை எப்படி உருவாக்குவாரோ, அதைப் போலவே AI படத்தையும் உருவாக்கத் தூண்டுகிறது. இது படத்திற்குத் தேவையான framing ஆழத்தையும் தருகிறது.Lighting and background queues: “deep black shadow background”, “only the face is visible” போன்ற ப்ராம்ப்ட் subject தனிமைப்படுத்தவும், படத்தின் நாடகத் தன்மையை (drama) அதிகரிக்கவும் உதவுகின்றன. இது பார்வையாளரின் கவனம் முழுவதும் முக்கியப் பொருளின் மீது பதிய வழிவகுக்கிறது.Texture and emotion: “water droplets on my face”, “proud expression” போன்ற விவரங்கள் படத்திற்கு கதை சொல்லும் அடுக்கு (storytelling layers) மற்றும் யதார்த்தத்தை (realism) சேர்க்கின்றன. இந்த நுணுக்கமான உணர்வுப்பூர்வமான விவரங்கள் படத்திற்கு உயிரோட்டத்தை அளிக்கின்றன.Resolution and aspect ratio: “10.7K 4HD” மற்றும் “4:3 ratio” போன்ற உயர் தெளிவுத்திறன் (high resolution) மற்றும் விகித விவரங்கள், இறுதிப் படம் பிரீமியம் தரத்திலும், print-ready இருப்பதை உறுதி செய்கின்றன. இது படத்தின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்துகிறது.AI மாடலுக்கு நாம் எவ்வளவு விரிவாகவும், நுணுக்கமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் கட்டளைகளை அளிக்கிறோமோ, அந்த அளவுக்கு அது நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற, உயர்தரமான மற்றும் கலைநயம் மிக்க படங்களை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம், புகைப்படக் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்முறை உபகரணங்கள் இல்லாமல், யார் வேண்டுமானாலும் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.Prompt 1:“Create a dramatic low-angle black and white portrait of my face with a confident expression. Use a cinematic 50mm lens effect, ultra-high-definition (10K), soft mist around the shoulders, and strong contrast lighting. The background should be completely black, and only the face should be in sharp focus. 4:3 ratio.”Prompt 2:“Generate a moody black and white side-profile portrait with a sharp focus on facial texture. Simulate a 24mm lens look, 4K resolution. Light rain on skin, subtle glistening effect, and soft shadows cast on a deep matte black background. Expression: calm and introspective. Use a 3:2 aspect ratio.”Prompt 3:“Render a high-contrast, close-up monochrome portrait using a virtual 85mm lens effect in 8K. Face should be directly lit with soft tones on the forehead and cheeks. Add light smoke in the background fading into black. Emphasize fine facial details with crisp clarity. 1:1 aspect ratio.”மேலே கொடுக்கப்பட்டுள்ள ப்ராம்ப்ட்களை உங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்து பயன்படுத்தலாம்.  AI கருவியுடன் நீங்கள் எவ்வளவு நுணுக்கமாகவும், தெளிவாகவும் தொடர்பு கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் படைப்புகள் சிறப்பாக அமையும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன