Connect with us

இந்தியா

புதுச்சேரி பா.ஜ.க புதிய தலைவர்: ரேஸில் முந்தும் வி.பி ராமலிங்கம்

Published

on

pondy bjp

Loading

புதுச்சேரி பா.ஜ.க புதிய தலைவர்: ரேஸில் முந்தும் வி.பி ராமலிங்கம்

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவிக்கு வரும் 30 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. நியமன எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வி.பி.ராமலிங்கம் பா.ஜக. மாநிலத் தலைவர் பதவியை பெற கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.புதுச்சேரி அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். புதிய தலைவர் தேர்தல் இதற்கு முன்பாக நாடுமுழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். யூனியன்பிரதேசமான  புதுச்சேரியில் பா.ஜ.க புதிய தலைவர் தேர்வு செய்யப்பட.உள்ளார். இதற்கான தேர்தல் நாளை மறுநாள் 30-த் தேதி நடைபெற உள்ளது.வேட்புமனு தாக்கல் இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடக்கிறது. மதியம் 1 முதல் 3 மணி வரை வேட்புமனு திரும்பப் பெறலாம். இதற்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலன் வெளியிட்டுள்ளார்.நாளை மறுநாள் தேர்தல் அநேகமாக வேட்பாளர்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்வார். அவரே நாளை மறுநாள் ஏகமனதாக மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக பா.ஜ.க. அகில இந்திய பொதுச்செயலாளர் அறிவிக்க உள்ளார். புதிய மாநிலத் தலைவராக வி.வி.ராமலிங்கம் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன