Connect with us

பொழுதுபோக்கு

அந்த விஷயத்தில் ஜோவிகா கவனமாக இருப்பார்; மகள் பற்றி பெருமையாக பேசிய வனிதா!

Published

on

Vanitha Jovika

Loading

அந்த விஷயத்தில் ஜோவிகா கவனமாக இருப்பார்; மகள் பற்றி பெருமையாக பேசிய வனிதா!

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் ஜூலை 4-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா குிறத்து பெருமையாக பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு ராஜ்கிரணுக்கு ஜோடியாக மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த இவர், திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகினார். ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்ற வனிதா, சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தயில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வனிதாவுக்கு, பட வாய்ப்புகள் குவிந்தது. பிரஷாந்த் நடித்த அந்தகன் படத்தில் கூட சமுத்திரக்கனியின் மனைவியாக வனிதா நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ள இவர், தற்போது தனது மகள் ஜோவிகா தயாரிப்பில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ளார்.ஸ்ரீமன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற ஜூலை 4-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகிளல் வனிதா விஜயகுமார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்து ஒரு படத்தில் வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவுமு் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது மகள் ஜோவிகா குறித்து வனிதா பெருமையாக பேசியுள்ளார்.  அதில், ”என் மகள் எப்போதும் எனக்கு அட்வைஸ் செய்து கொண்டே இருப்பாள். என் மகள் காதலிப்பாளா என்பதில் என் கருத்து சரியாக இருக்காது. ஆனால் என்னுடைய வாழ்க்கையின் மூலமாக காதல், அதனால் ஏற்படும் வலிகளை பற்றி அவள் கற்றுக் கொண்டிருக்கிறாள். எனவே அவள் காதல் செய்ய மாட்டாள் என்றே நான் கருதுகிறேன். அந்த விஷயத்தில் என் மகள் கவனமாக இருப்பாள் என்று எனக்கு தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன