Connect with us

இலங்கை

ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு ; கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Published

on

Loading

ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு ; கடைசியில் நடந்த ட்விஸ்ட்

நார்வேயில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பதாக அந்நாட்டு அரசால் நடத்தப்படும் சூதாட்ட நிறுவனம் அனுப்பிய தகவலே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

Advertisement

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏனென்றால் அந்த தகவல் தவறுதலாக மக்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது பின்னர் தெரியவந்தது.

யூரோஜாக்பாட்டில் “ஆயிரக்கணக்கான மக்கள்” பல கோடி ரூபாய் வென்றிருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் அவர்கள் வென்ற தொகைக்கு மாறாக, அதிகபட்ச தொகையை வென்றிருப்பதாக வெள்ளிக்கிழமை தவறான தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது,” என்று நார்ஸ்க் டிப்பிங் என்ற அந்த நிறுவனம் தெரிவித்தது.

Advertisement

தவறான தகவல் அனுப்பப்பட்டதால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை அந்த நிறுவனம் பிபிசிக்கு அளிக்க மறுத்துவிட்டது.

நார்ஸ்க் டிப்பிங் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இருந்த சக்ஸ்டுயென் மன்னிப்பு கேட்டதோடு, ஒரு நாள் கழித்து தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்தார்.  

ஐரோப்பிய நாணயமான யூரோவை நார்வீஜியன் க்ரோனெர் பணமாக மாற்றுகையில் தவறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக, மக்களுக்கு அனுப்பப்பட்ட தகவலில், அவர்கள் வென்ற பணத்தைக் காட்டிலும் கூடுதலாக பணத்தை வென்றதாக குறிப்பிட்டிருக்கிறது.

அவர்கள் வென்ற பணத்தை நூறால் வகுப்பதற்கு பதிலாக, நூறால் பெருக்கி வரும் தொகையை வென்றுவிட்டதாக மக்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன