வணிகம்
Today Gold Rate July 1: மாதத்தின் முதல் நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா?

Today Gold Rate July 1: மாதத்தின் முதல் நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா?
Gold Price Today in Chennai in Tamil: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வந்தது. இந்த சூழலில் ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளிலும் தங்கத்தின் விலை குறைந்திருந்தது.நேற்று (ஜூன் 30) தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்துவந்த நிலையில், மாதத்தின் முதல்நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து, சவரன் ரூ.72,160-க்கும், ஒரு கிராம் ரூ.9,020-க்கும் விற்பனையாகிறது.