இலங்கை
முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண் உயிரிழப்பு; பொலிஸார் சந்தேகம்

முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண் உயிரிழப்பு; பொலிஸார் சந்தேகம்
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பொரளை வீட்டில் பணிப்பெண் ஒருவர் லிஃப்டில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பொரளை காவல்துறையினரின் தகவல்படி உயிரிழந்த பெணிப்பெண்ணுக்கு 68 வயதுடையவர் என கூறப்படுகின்றது.
வீட்டின் வெளியே அமைந்துள்ள லிஃப்டில் தரை தளத்திலிருந்து மேல் தளத்திற்குச் செல்லும்போது, கொங்கிரீட் தூணில் தலை மோதியதால் பெண் உயிரிழந்திருக்கலாம் என என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.