சினிமா
சூர்யாவின் சரிவிற்கு காரணம் என்ன தெரியுமா.? யூடியூபர் பிஸ்மி ஓபன்டாக்!

சூர்யாவின் சரிவிற்கு காரணம் என்ன தெரியுமா.? யூடியூபர் பிஸ்மி ஓபன்டாக்!
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களின் படதேர்வுகள், சவால்கள், மார்க்கெட்டிங் நோக்கங்கள் எனப் பல விவாதங்கள் இடம்பெற்று வரும்நிலையில், தற்போது நடிகர் சூர்யா குறித்து யூடியூபர் பிஸ்மி, சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.அவர் கூறிய கருத்துகள் சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பிஸ்மியிடம் நடுவர், “சூர்யா மிகப்பெரிய நடிகர். தொடர்ந்து நல்ல படங்கள் அவருடைய கையை விட்டு சென்றுவிட்டது போல இருக்கிறது. இதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுப்பினார்.அதற்கு பிஸ்மி, “சமீபகாலமாக அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சூர்யாவிற்கு தனது அடையாளத்தை விட தான் ஒரு அஜித் அல்லது விஜய் மாதிரி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது. இப்டி எப்ப நினைக்க ஆரம்பிச்சாரோ அப்ப தான் அவருக்கான சரிவு ஏற்படத் தொடங்கியது.” எனக் கூறினார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.