சினிமா
“இறைவனே சொன்னார் நீ எடுக்கணும்..!சரத்குமாரின் உணர்வுபூர்வமான ‘கண்ணப்பா’அனுபவம்…!

“இறைவனே சொன்னார் நீ எடுக்கணும்..!சரத்குமாரின் உணர்வுபூர்வமான ‘கண்ணப்பா’அனுபவம்…!
பல்வேறு மொழிகளில் உருவாகி, இந்திய சினிமாவின் பன்முக முகாமைத்துவத்திற்கு புதிய அடையாளமாகத் திகழும் ‘கண்ணப்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார், ஒரு உணர்வுபூர்வமான பேட்டியில் தனது அனுபவங்களையும், இறைவனின் வழிகாட்டுதலையும் பகிர்ந்துள்ளார்இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர் . அதாவது மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, ஆர். சரத்குமார், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், பிரம்மாஜி, சிவா பாலாஜி, கௌஷல் மந்தா, ராகுல் மாதவ், தேவராஜ், முகேஷ் ரிஷி, ரகு பாபு, மது ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஸ்டீபன் தேவஸ்ஸி இசையமைத்து இருந்தார். மேலும் சரத்குமார் தனது பேட்டியில் கூறும்போது, ஒரு ஆர்வத்தின் காரணமாக இந்த பிரம்மாண்ட முயற்சியில் இறங்கியதாகத் தெரிவித்துள்ளார்.”ஒரு படம் மட்டும் அல்ல இது. இது ஒரு அனுபவம். ஒவ்வொரு மொழியிலும் என் குரல் உணர்வை இழக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதால்தான் நேரடியாக டப்பிங் செய்தேன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் இவை அனைத்திலும் என் குரல்தான்,”என்று அவர் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . ‘கண்ணப்பா’ ஒரு சாதாரண ஆன்மீக திரைப்படம் அல்ல. இது நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பின் விளைவாக உருவான ஒரு பெரும் பன்னாட்டு முயற்சி. அதில் சரத்குமார் எடுத்த குரல்மிக்க முயற்சி, அவரது ஆழமான ஆன்மீக நம்பிக்கை மற்றும் கலையுணர்வை வெளிக்கொணர்கிறது.“இந்த அனுபவம் என்னை உள்ளிருந்து மாற்றி வைத்தது. இது ஒரு படம் மட்டும் அல்ல. இது ஒரு பயணம்,” என்று அவர் பேட்டியின் முடிவில் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது.