இலங்கை
வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலய தேர் ; திரண்ட பக்தர்கள்

வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலய தேர் ; திரண்ட பக்தர்கள்
மட்டக்களப்பு – வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றைக் கொண்ட ஆலயமாகும்.
கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தேரோட்டம் இன்று (ஜூன் 1) இடம்பெற்றது.
இன்று பஞ்சமுக விநாயகர் தேரில் அமர்ந்து நூற்றுக்கணக்கில் பக்த அடியார்கள் கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்துச் சென்றனர்.
ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான தேரோட்டம் வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலய வீதி, சேர்மன் கனகரெத்தினம் வீதி, பிரதான வீதி, விபுலானந்தர் வீதி மற்றும் கல்குடா வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மாம்பழத் திருவிழா, திங்கட்கிழமை வேட்டைத்திருவிழா இடம்பெற்று இன்று தேர்த்திருவிழா இடம்பெற்ற நிலையில் நாளை புதன்கிழமை பாசிக்குடா வங்கக் கடலில் தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
அதேவேளை இங்குள்ள மூல விக்கிரகம் கைலாய மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் உருவாக்கப்பட்ட ஆலயமாகும்.