Connect with us

தொழில்நுட்பம்

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு… இனி எல்லாம் ஒரே செயலியில்! ரயில் ஒன் ஆஃப் அறிமுகம்!

Published

on

Railone app

Loading

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு… இனி எல்லாம் ஒரே செயலியில்! ரயில் ஒன் ஆஃப் அறிமுகம்!

இந்தியாவில் கோடிக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, ரயில் சேவைகளை பெற வெவ்வேறு செயலிகள் இருக்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ‘ரயில் கனெக்ட்’ என்ற செயலி உள்ளது.புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற ‘யு.டி.எஸ்.’ செயலி உள்ளது. இதுதவிர, தனியார் துறை செயலிகளும் இயங்கி வருகின்றன.இதற்கிடையே, இந்திய ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘ரயில்ஒன்’ என்ற செல்போன் செயலியை ரயில்வே அமைச்சகம் உருவாக்கி வந்தது. இந்த செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் அறிமுகம் செய்துவைத்தார். இந்த ரயில் ஒன் செயலியில், முன்பதிவு ரெயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, பயண திட்டமிடல், ரயில் உதவி சேவைகள், ரயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம். இதனால் ரயில்வே சேவைகளுக்கு இனி இனி தனித்தனி செயலி பதிவிறக்கம் செய்து வைத்து இருக்க தேவையில்லை என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இனிமேல், டிக்கெட் முன்பதிவு செய்ய ஒரு செயலி, PNR நிலையைச் சரிபார்க்க மற்றொரு செயலி, ரயில் இருப்பிடத்தை அறிய வேறு ஒரு செயலி எனப் பல செயலிகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ரயில் ஒன் செயலி உங்கள் மொபைலில் இடத்தை மிச்சப்படுத்துவதோடு, உங்கள் நேரத்தையும் கணிசமாகச் சேமிக்கும்.ரயில் ஒன் செயலியின் முக்கிய அம்சங்கள்:முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் (IRCTC), முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் (UTS), பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள், PNR நிலை சரிபார்த்தல், ரயிலின் நேரலை இருப்பிடம், ரயில் பெட்டி நிலை, ரயில் குறித்த விசாரணைகள், உங்கள் பயணத் திட்டம், ரயில் மதாட் (Rail Madad) சேவைகள், ரயில்வே குறித்த குறைகளைத் தீர்த்தல், இ-கேட்டரிங் (உணவு ஆர்டர் செய்தல்), போர்ட்டர் முன்பதிவு மற்றும் கடைசி மைல் டாக்ஸி சேவை போன்ற அனைத்து சேவைகளையும் இந்த ஒரு செயலிலேயே நீங்கள் பெறலாம்.நீங்கள் ஏற்கனவே RailConnect அல்லது UTS கணக்கு வைத்திருந்தால், அதே விவரங்கள், mPIN அல்லது பயோமெட்ரிக் உள்நுழைவு மூலம் ரயில் ஒன் செயலியில் எளிதாக உள்நுழையலாம். புதிய பயனர்கள் எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம். தற்காலிகமாக உள்நுழைய ‘விருந்தினர் உள்நுழைவு’ வசதியும் உள்ளது.விரைவான மற்றும் தடையற்ற பரிவர்த்தனைகளுக்காக ‘ஆர்-வாலட்’ (R-Wallet) வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடியும் பெறலாம். எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், தேவையான சேவைகளை எளிதாகக் கண்டறியலாம். இந்தச் செயலி ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோர் இரண்டிலும் பதிவிறக்கக் கிடைக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன