Connect with us

சினிமா

“ராமாயணா” முதல்பாகம் Finish; டீசர் எப்போது தெரியுமா? தீயாய் பரவும் படக்குழுவின் அப்டேட்!

Published

on

Loading

“ராமாயணா” முதல்பாகம் Finish; டீசர் எப்போது தெரியுமா? தீயாய் பரவும் படக்குழுவின் அப்டேட்!

பாலிவுட் சினிமா வரலாற்றில் பிரமாண்டமாக உருவாகி வரும் “ராமாயணா” ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. நிதிஷ் திவாரி இயக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அது மட்டுமல்லாமல், டீசர் நாளை வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டதிலிருந்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய்பல்லவி, மற்றும் யாஷ் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இவர்கள் மூவரின் உணர்வுமிக்க பாத்திரங்களும் இந்த திரைப்படத்தை மூலதன ரீதியில் மட்டுமல்லாது விமர்சன ரீதியிலும் உயர்த்தும் என சிலர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இப்படத்தின் முதலாம் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன