இலங்கை
கற்கைநெறிகள் ஆரம்பம்!!

கற்கைநெறிகள் ஆரம்பம்!!
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான முழுநேரக் கற்கைநெறிகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளன. இக்கற்கைநெறிகள் யாழ்ப்பாணம், கைதடி, வல்வெட்டித்துறை, பண்டத்தரிப்பு, சுன்னாகம் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெற்றுவருகின்றன.
தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியலாளர், மின்னிணைப்பாளர், கணிய அளவையியலாளர், விருந்தினர் வரவேற்பாளர், வெதுப்பாளர், சமையலாளர், நீர்க்குழாய் பொருத்துனர், முச்சக்கரவண்டி பொறிவலர், அலுமினியம் பொருத்துனர், உணவு மற்றும் குளிர்பானம் பரிமாறுபவர், குழந்தை பராமரிப்பாளர், பெண்கள் சிறுவர்களிற்கான ஆடை வடிவமைப்பாளர், சிகையலங்கரிப்பாளர், அழகுக்கலை வல்லுநர். விரைவுசேவை உணவு வழங்குநர், குளிரூட்டி மற்றும் வளிசீராக்கி திருத்துனர், மரவேலை தொழினுட்பவியலாளர், காய்ச்சி இணைப்பவர்(வெல்டர்), கட்டட நிர்மாண உதவியாளர் போன்ற கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக்கற்கைநெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை மட்டம்-4 சான்றிதழுக்கான பயிற்சிநெறிகளாகும். கற்க விரும்புவோர் தங்கள் பதிவுகளை எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மாவட்ட அலுவலகம் 4ஆம் மாடி வீரசிங்கம் மண்டபம், இல. 12 கே.கே.எஸ்.வீதி. யாழ்ப்பாணம் அல்லது அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மேற்கொள்ள முடியும். மேலதிக விவரங்களினைப் பெற்றுக்குள்வதற்கு 0212227949, 0710318737, 0776139307ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.