இலங்கை
இளைஞரைக் கடத்தி ‘ஏ.ரி.எம்.’ இல் கொள்ளை; வவுனியாவில் மூவர் கைது!

இளைஞரைக் கடத்தி ‘ஏ.ரி.எம்.’ இல் கொள்ளை; வவுனியாவில் மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வந்து, வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கடத்தித் தாக்குதல் நடத்தி, அவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த இளைஞரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் அவரது ஏ.ரி.எம். அட்டையைப் பறித்தெடுத்து பின்னர், அதைவைத்து 50 ஆயிரம் ரூபாவைக் கொள்ளையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 19, 21 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.