இலங்கை
இனவாதத்துக்கு இடமேயில்லை; அநுர ஆணித்தரம்

இனவாதத்துக்கு இடமேயில்லை; அநுர ஆணித்தரம்
எந்தச் சூழ்நிலையிலும் இனவாதத்தை மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்னேவ மகாவலி விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன. இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். தற்போதுள்ள சட்டங்கள் அதற்குப் போதுமானதாக இல்லாவிட்டால். சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும்.
அத்துடன், சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – என்றார்.