இலங்கை
கடந்ததை தோண்டுவதைவிட குணப்படுத்த மருந்திடுங்கள்! கூறுகிறார் விமல் வீரவன்ஸ
கடந்ததை தோண்டுவதைவிட குணப்படுத்த மருந்திடுங்கள்! கூறுகிறார் விமல் வீரவன்ஸ
செம்மணி புதைகுழியைத் தோண்டி எலும்புக்கூடுகளை எடுத்து கடந்த காலங்களைத் தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருக்க இதயங்களைக் குணப்படுத்தும் நடவடிக் கையே தற்போது முன்னெடுக்கப்படவேண்டும்.- இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணிப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இறுதி பெறும் வரை எம்மால் தீர்மானமொன்றுக்கு வரமுடியாது. அடுத்தகட்ட அகழ்வுப்பணியின் போது இராணுவத்தின் இலக்கத்தகடு மீட்கப்பட்டால் விசாரணை அடுத்த கோணத்துக்குள் செல்லும். இலங்கை போர் நடைபெற்ற நாடு. புதைகுழி உள்ள இடம் போர் நடைபெற்ற பகுதி அனைத்துத் தரப்புகளிலும் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளன. எனவே உயிரிழந்த மக்களின் எலும்புக்கூடுகளை மீட்டு, கடந்த காலம் பற்றி தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாத வகையில் இதயங்களைக் குணப்படுத்தும் நடவடிக்கையே இடம்பெறவேண்டும். ஆனால், அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக வைராக்கியமே விதைக்கப்படுகின்றது. சர்வதேசம் மற்றும் அடிப்படைவாதக் குழுக்களின் நோக்கமும் இதுதான் – என்றார்.