இலங்கை
பிரபாகரனைக் காப்பாற்ற மறுத்ததால் மஹிந்த இலக்கு; சரத் வீரசேகர புதிய கதை

பிரபாகரனைக் காப்பாற்ற மறுத்ததால் மஹிந்த இலக்கு; சரத் வீரசேகர புதிய கதை
மேற்குலகம் தன்னைக் காப்பாற்றுமென பிரபாகரன் இறுதிவரை நம்பி இருந்தார். அதற்கு மஹிந்த ராஜபக்ச இடமளிக்காததாலேயே அவரை மேற்குலகம் இலக்குவைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ் வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- போரை நிறுத்துமாறு இறுதிக்கட்டம் வரை மேற்குலக நாடுகள் மஹிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்தன. அதற்கு அவர் அடிபணியவில்லை. போரைத் தொடர்ந்து முன்னெடுத்தார். காப்பற்றப்படுவீர்கள் என்ற உத்தரவாதத்தை பிரபாகரனுக்கு மேற்குலகம் வழங்கி இருந்ததால் கடைசி இரு மணிநேரம் கூட அந்த நம்பிக்கை பிரபாகரனுக்கு இருந்தது. புலிகளின் உரையாடல்களை நாம் கண்காணித்திருந்தோம். அதன் மூலம் இந்த விடயம் தெரியவந்தது.
பிரபாகரனைக்காப்பாற்றமுடியாமற்போனது மேற்குலகுக்கு பலத்த அடி மற்றும் வெட்கமாகும். அன்றிலிருந்து தான் மஹிந்த ராஜபக்ச இலக்குவைக்கப்பட்டு, ஆட்சி மாற்ற முயற்சி எடுக்கப்பட்டது – என்றார்.