உலகம்
ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை!

ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை!
இராணுவ ஊழல் வழக்கு தொடர்பாக, ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் திமூர் இவனோவுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமூர் இவனோவ், கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ராணுவ கட்டுமானத் திட்டங்களை மேற்பார்வையிட்டார்.
அதற்கான நிதியில் அவர், ரூ.417 கோடி அளவில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த நிலையில் 2024-ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
மாஸ்கோ நீதிமன்றம் திமூர் இவனோவ் குற்றவாளி என அறிவித்ததுடன், அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது. அத்துடன் அவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை