இலங்கை
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 20இற்கும் மேற்பட்ட மனித புதைக்குழிகள்!

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 20இற்கும் மேற்பட்ட மனித புதைக்குழிகள்!
இலங்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி மற்றும் யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக பதிவாகியுள்ளன.
புதைகுழிகள்
யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டு அரங்கம்
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி
யாழ்ப்பாணம் – மிருசுவில் மனிதப் புதைகுழி
கிளிநொச்சி – மனிதப் புதைகுழி
கிளிநொச்சி – கணேசபுரம் மனிதப் புதைகுழி
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மனிதப் புதைகுழி
முல்லைத்தீவு – 2 முல்லைத்தீவு மனிதப் புதைகுழி
மன்னார் – மன்னார் மனிதப் புதைகுழி
மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி
குருநாகல் – நிகவரபிட்டிய மனிதப் புதைகுழி
கம்பஹா – மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை
கம்பஹா – எஸ்செல்ல மனிதப் புதைகுழி
கம்பஹா – வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைகுழி
கொழும்பு – கோகந்தர மனிதப் புதைகுழி
கொழும்பு – பொல்கொட எரி மனிதப் புதைகுழி
மாத்தறை – அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைகுழி
இரத்தினபுரி – இறக்குவானை – சூரியகந்தை மனிதப் புதைகுழி
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி மனிதப் புதைகுழி
மாத்தளை – மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைகுழி
கண்டி – அங்கும்புர மனிதப் புதைகுழி
முல்லைத்தீவு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி
கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி
அரியாலை – சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி.
லங்கா4 (Lanka4)
அனுசரணை