சினிமா
ரோகிணியை வெளுத்து வாங்கிய ஸ்ருதி! மீனாவுக்கு ஹெல்ப் பண்ணும் அண்ணாமலை.. கோபத்தில் விஜயா

ரோகிணியை வெளுத்து வாங்கிய ஸ்ருதி! மீனாவுக்கு ஹெல்ப் பண்ணும் அண்ணாமலை.. கோபத்தில் விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ஸ்ருதி ரவியை பாத்து ரெஸ்டாரெண்டுக்கு என்ன பொருட்கள் வாங்கலாம் என்று ஜோசிச்சிட்டு இருக்கேன் என்கிறார். அதுக்கு ரவி எப்ப பார்த்தாலும் எதையாவது ஜோசிச்சிட்டு இருக்காத கொஞ்சம் ரிலாக்ஸா இரு என்கிறார். பின் ரவி இந்த ரெஸ்டாரெண்ட் தொடங்கிறதுக்கு டைம் இருக்கு பிறகு இதை பற்றி எல்லாம் ஜோசிக்கலாம் என்கிறார். அதுக்கு ஸ்ருதி சரி சீதாவோட கல்யாணம் முடியுற வரைக்கும் இதெயெல்லாம் நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லுறார்.அதைக் கேட்டு ரவி சந்தோசப்படுறார். இதனை அடுத்து அண்ணாமலை மீனாவுக்கு கல்யாண செலவுக்கு தேவையான பணத்தைக் கொடுக்கிறார். அதைப் பார்த்த விஜயா எதுக்கு அவளுக்கு பணத்தைக் கொடுக்கிறீங்க என்று கேட்கிறார். அதுக்கு அண்ணாமலை இந்தப் பணம் நான் சீதாவுக்காக கொடுக்கிறேன் என்று சொன்னது அதைத் தான் கொடுத்தனான் என்கிறார். பின் விஜயா அண்ணாமலையை பாத்து எவளோ ஒருத்திக்கு எதுக்கு தானம் பண்ணுறீங்க என்று கேட்கிறார். அதைக் கேட்டவுடனே மீனா அண்ணாமலையைப் பாத்து இந்தப் பணம் எல்லாம் எனக்கு வேணாம் என்று சொல்லுறார். பின் ரவி சீதா கல்யாணத்திற்கான சாப்பாட்டு செலவை நான் பார்த்துக்கிறேன் என்கிறார். இதனை அடுத்து ஸ்ருதி தான் சீதாவுக்கு 3சவரனில செயின் செய்து கொடுக்கப்போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்டு வீட்ட இருந்த எல்லாருமே ஷாக் ஆகுறார்கள். அதுக்கு விஜயா அப்ப இந்த வீட்டு செலவில தான் சீதாவோட கல்யாணம் நடக்கப்போகுதா என்று கேட்கிறார்.அதை தொடர்ந்து ரோகிணி ஸ்ருதியைப் பார்த்து நான் பணம் கேட்ட போது இல்ல என்று சொல்லிட்டு இண்டைக்கு சீதாவுக்காக செயின் வாங்கி கொடுக்கபோறேன் என்கிறீங்க இது சரியா என்று கேட்கிறார். அதுக்கு ஸ்ருதி நீங்க தேவையில்லாத விஷயத்துக்காக பணம் கேட்டீங்க என்கிறார். இதனை அடுத்து ரோகிணி நித்திரையில சத்தமா கத்துறார். அதை கேட்டு வீட்டில இருக்கிற எல்லாரும் நித்திரையால எழும்பிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.