இலங்கை
செம்மணி புதைக்குழி மூலமான அரசியல் எமக்கு வேண்டாம் தீர்வுதான் வேண்டும்!

செம்மணி புதைக்குழி மூலமான அரசியல் எமக்கு வேண்டாம் தீர்வுதான் வேண்டும்!
சமீப காலமாக உலகலாவிய ரீதியில் பேசு பொருளாகமாறியுள்ள செம்மணி புதைக்குழி மூலம் எம் தமிழ் இன மக்களுக்கு தீர்வு வேண்டுமே தவிர பரிதாபங்கள் இல்லை என ஜனநாயக இளைஞர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட தவிசாளர் லதுர்ஷான் வெள்ளசாமி தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியோ, தீர்வோ கிடைக்கப்படாத நிலையில் செம்மணி புதைக்குழியானது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது வேதனையளிக்கிறது.
செம்மணி புதைக்குழி தொடர்பாக அரசாங்கம் முழு கவனத்தை செலுத்துவதன் மூலம் செம்மணி புதைக்குழிக்கான நிரந்தர தீர்வை பெற முடியும் என நம்புவதோடு வடக்கு கிழக்கு மற்றும் இலங்கை வாழ் அனைத்து தமிழர்களின் உரிமைக்காக மலையக இளைஞர் என்றும் கைகோர்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை