சினிமா
சிம்பு, வெற்றிமாறன், மணிகண்டன் இணையும் மாஸ் கூட்டணி…! தமிழ் சினிமாவில் புதிய universe..!

சிம்பு, வெற்றிமாறன், மணிகண்டன் இணையும் மாஸ் கூட்டணி…! தமிழ் சினிமாவில் புதிய universe..!
தமிழ் சினிமாவின் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் நடிகர் சிம்பு (STR) தற்போது சினிமாவில் புதிய பரிமாணங்களை தேடிக்கொண்டு வரும் நடிகராக திகழ்கிறார். அவரது மூன்று பெரிய படங்கள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மிக முக்கியமான படம் ஒன்றாக வெற்றிமாறன் இயக்கும் புதிய படம் உருவாகி வருகிறது. இது சிம்புவின் ரசிகர்களை மட்டுமல்லாது, வெற்றிமாறன் பாணியில் கேங்ஸ்டர் கதைகளை விரும்புபவர்களையும் மகிழ்விக்கக் கூடியதாக அமைந்துள்ளது.இப்படத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இது வெற்றிமாறன் இயக்கிய “வடசென்னை” திரைப்படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக (prequel) உருவாகும் என்று கூறப்படுகிறது. வடசென்னை திரைப்படம் 2018-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் தனுஷ் நடித்து புகழ் பெற்றார். அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இந்த புதிய படம் வடசென்னை படத்தின் கதைக்கு முன்புள்ள நிகழ்வுகளை ஆழமாக தோற்றுவிக்கும் வகையில் உருவாக இருக்கிறது.இப்படத்தில் சிம்பு இரண்டு தோற்றங்களில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளமையான தோற்றத்தில் ஒரு பாத்திரம், மேலும் சிறிய முதுமை தோற்றத்துடன் மற்றொரு வேடம் என சிம்பு இந்த கதையில் முக்கியமான பரிணாமங்களை கொண்டு நடிக்கவுள்ளார். இந்த இரட்டை வேடமும் கதையின் முக்கிய அச்சுகளாக உருவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதற்காக சிம்பு சமீபத்தில் படப்பிடிப்புக்காக புதிய கெட்டப்பில் தோன்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு புறம் அவர் மெலிந்த உடலமைப்புடன் கூடிய அதிரடியான தோற்றத்தில் காணப்படுகிறார். இது ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.மேலும் “குட் நைட் “படத்தில் நடித்த மணிகண்டன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகதகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் நடிக்கவுள்ள அந்தக் கதாப்பாத்திரம் இந்த படத்திலும், வரவிருக்கும் வடசென்னை 2 படத்திலும் தொடர்ச்சியாக இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வடசென்னை உலகை (cinematic universe) விரிவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணியானது இதுவரை திரையில் காணப்படாத நிலையில் மணிகண்டனும் இவர்களுடன் இணைவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது .மேலும் புதிய பாணியைக் கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது. மூவரும் தனித்துவமான பாணியினை கொண்டவர்கள். வெற்றிமாறனின் கதையமைப்பு மற்றும் சமூக பார்வை சேர்ந்த கதைநயமும், சிம்புவின் நடிப்புத் திறனும் மேலும் இவர்களுடன் இணையும் மணிகண்டனுடைய நடிப்பு திறமையும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் நிலவுகிறது.