பொழுதுபோக்கு
லவ்னா வந்துடுவீங்களே… மீண்டும் காதலில் விழுந்த சரத்குமார்: ராதிகாவிடம் மாட்டிவிட்ட கே.எஸ்.ரவிக்குமார்!

லவ்னா வந்துடுவீங்களே… மீண்டும் காதலில் விழுந்த சரத்குமார்: ராதிகாவிடம் மாட்டிவிட்ட கே.எஸ்.ரவிக்குமார்!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ சுப்ரீம் ஸ்டார் என்ற அடைமொழியுடன் வலம் வந்த நடிகர் சரத்குமார் மீண்டும், தேவயானியுடன் இணைந்து 3பிஎச்கே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக, இயக்குனர் கே.எஸ்ரவிக்குமார் பேட்டி எடுக்க, சரத்குமார், தேவயானி, சித்தார்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் சரத்குமார் மீண்டும் காதலில் விழுந்ததாக கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் தற்போது கேரக்டர் நடிகராக பல படங்களை கைவசம் வைத்துள்ள சரத்குமார் நடிப்பில், அடுத்து வெளியாக உள்ள படம் 3பிஎச்கே. 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த், தேவயானி, யோகி பாபு, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம், ஜூலை 4-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்பு, சரத்குமார் தேவயானி ஜோடி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது,அதே சமயம் இவர்கள் நடிப்பில் வெளியாகி இன்றுவரை பேசப்பட்டு வரும் சூர்யவம்சம் படத்தில் நடித்திருந்ததால், இந்த படம் அந்த படத்தின் 2-ம் பாகம் என்று கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, அதே சமயம், படக்குழுவினர் தீவிர ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சரத்குமார், சித்தார்த், தேவயானி ஆகியோர் பங்கேற்க, பிகைண்ட்வுட்ஸ் சேனலில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நேர்காணல் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இந்த நேர்காணலில், சாதாரணமாக படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் தனது கடைசி படம் என்று கூறியுள்ளார். இதை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டபோது, அனைவரும் பொது வாழ்க்கைக்கு வர வேண்டும் என்பது எனது விருப்பம். அதே சமயம் யார் வேண்டுமானாலும் பொது வாழ்க்கைக்கு வரலாம். ஆனால் மக்கள் கொடுக்கும் அங்கீகாரத்தை பொருத்து தான் அனைத்தும் நடக்கும். விஜய்க்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். மக்கள் அவருக்கு ஆதரவு குறித்து பார்ப்போம் என்று கூறியள்ளார் சரத்குமார்.அதன்பிறகு சித்தார்த்திடம் படத்தில் லவ் இருக்கிறதா என்று கே.எஸ்.ரவிக்குமார் கேட்க, உடனடியாக சரத்குமார் இருக்கு என்று எதோ சொல்ல வருகிறார். ஆனால் தேவயானி, சார் வேண்டாம் என்று சரத்குமாரை தடுத்துவிடுகிறார். அதன்பிறகு சமாளிக்கும் சரத்குமார், நான் லவ் பண்ணுவது தெரிஞ்சு இவங்க வீட்டில் பிரச்னை என்று சொல்ல வந்தேன் சார் என்று தேவயானியை பார்த்து சொல்கிறார். இதை கேட்ட கே.எஸ்.ரவிக்குமார் நீங்க லவ் பண்றீங்களா என்று கேட்க, மறுபடியும் கதை என்று தேவயானி சொல்கிறார்.இவர்களின் பேச்சை கேட்ட கே.எஸ்.ரவிக்குமார், நீங்க லவ் பண்ற பத்தி பேசுனீங்களா மாட்டிக்குவீங்க, மேடம், ராதிகா மேடம் என்று ராதிகாவை அழைக்கிறார். அதன்பிறகு புரியாத புதிர் படத்தில் இருந்து நான் இவரை பார்க்கிறேன் என்று சொல்ல, சரத்குமார் அவரை போதும் சார் விடுங்க என்று சொல்லி விடுகிறார். அதன்பிறகு சித்தாத்திடம் அவரது திருமண வாழ்க்கை குறித்து கேட்க, அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன் என்று சரத்குமார் கையை கட்டிக்கொண்டு கேட்கிறார். நீங்க லவ்வுனா வந்துடுவீங்கனு எல்லாருக்குமே தெரியும் சார் உலகம் முழுக்க தெரியும் என்று கே.எஸ்.ரவிக்குமார் சொல்கிறார். இந்த வீடியோ வைரரதகி வருகிறது.