இலங்கை
போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் வர்த்தகர் கைது

போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் வர்த்தகர் கைது
ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதாகியுள்ளார்.
வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரான வர்த்தகர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து இன்றைய தினம் காலை 09.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரான வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Red Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து ஒரு கிலோ 847 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.