பொழுதுபோக்கு
என் கால் விரலை கடித்த சிவாஜி, தொட்டவுடன் சிலிர்த்த உடல்; எதற்காக இப்படி செய்தார்? சிவக்குமார் ப்ளாஷ்பேக்

என் கால் விரலை கடித்த சிவாஜி, தொட்டவுடன் சிலிர்த்த உடல்; எதற்காக இப்படி செய்தார்? சிவக்குமார் ப்ளாஷ்பேக்
சிவாஜி கணேசனின் பராசக்தி படம் வெளியாகும்போது எனக்கு 10 வயது. ஆனால் நான் அவருடன் இணைந்து நடிக்கும்போது அவர் என் கால் விரலை கடித்து மெட்டியை எடுப்பார். இந்த காட்சியை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளர்.தமிழ் சினிமாவில் நடிகரும் சிறந்த ஓவியருமான சிவக்குமார், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, சுரேந்தர் என்ற முக்கிய கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவக்குமாருக்கு பட வாய்ப்பும் அடுத்தடுத்து கிடைத்து வந்தது. அடுத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் கந்தன் கருணை உள்ளிட்ட படங்களில் நடித்த சிவக்குமாருக்கு ஏ.வி.எம். தயாரிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் சிவக்குமார் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார்.தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவக்குமார், ஒரு சிறந்த ஒவியரும் கூட. தான் பார்ப்பதை தத்ருர்பமாக வரையும் திறன்கொண்ட சிவக்குமார், திருமால் பெருமை படத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்தும், சிவாஜி கணேசனுடன் தனக்கு இருக்கும் நெருக்கம் குறித்தும் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்துஅவர் கூறுகையில், பராசக்தி படம் வெளியாகும்போது எனக்கு 10 வயது. நடிப்பு என்றால் என் உடலில் சிவாஜி ரத்தம் தான் ஓடுகிறது. அவரின் பல படங்களை பார்த்து அவருக்கு தீவிர ரசிகராகிவிட்டேன். சென்னைக்கு சென்றால் ஒருமுறை அவரை பார்த்தவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சென்னை வந்த 2-வது நாளே அவரை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அப்போது அவர் தான் சினிமா கட்டவுட் வரையும் இடத்தில் என்னை சேர்ந்துகொள்ள சொன்னார்.அவர் சொன்னபடி அங்கு சேர்ந்தேன். ஆனால் அது அடிமை வேலை என்று தெரிந்தது. அதன்பிறகு அங்கிருந்து விலகி ஓவிய கல்லூரியில் இணைந்தேன். அதன்பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகனாகிவிட்டேன். சில ஆண்டுகள் கழித்து உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் ஒரு சுண்டைக்காய் நடிகன். ஆனால் என் கால் விரல்களை கடித்து மெட்டி எடுக்கும் காட்சியில் தயக்கம் இல்லாமல் நடித்தவர் தான் சிவாஜி கணேசன்.திருமால் பெருமை படத்தில் அவர் ஒரு திருமால் பக்தர். திருமால் கோவில் கட்டுவதற்காக பணிகளை தொடங்கி, பணம் இல்லாததால் சொள்ளையடித்தவது கோவிலை கட்ட முயற்சிப்பார். அப்போது நான் புதிதாக திருமணமாகி வருவேன். தாலியை தவிர மற்ற அனைத்தையும் எங்களிடம் இருந்து வாங்கிக்கொள்வார். அப்போது என் காலில் இருக்கும் மெட்டியை கழற்ற முடியவில்லை. அப்போது சிவாஜி அவரது வாயால் ன் கால் விரலை கடித்து மெட்டியை எடுப்பார். அப்போது நான் அவர் தலையில் கைவைக்க அவர் உடல் சிலிர்த்துவிடும்.இந்த காட்சி படமாக்கப்படும்போது சிவாஜி எவ்வித தயக்கமும் இன்றி நடித்தார். இன்னும் சொல்லப்போனால் ஷாட் ஓகேவா, இன்னும் ஒரு ஷாட் எடுக்கலாமா என்று கேட்டார். நான் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் போதும் என்று சொன்னேன் என்று சிவக்குமார் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.